Wednesday, August 24, 2011

ஜன லோக்பால் - உண்ணா விரதம்

22/08/2011  அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வலிமையான லோக்பாலை வலியுறுத்தி, அன்னா ஹசாரே அவர்களுக்கு ஆதரவாக, நமது இயக்கம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப் பட்டது. 


நிகழ்ச்சிக்கு தலைவர் திரு. ரா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் திரு.செல்வராஜ் உட்பட மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். வள்ளலார் அறக்கட்டளையின் தலைவர் திரு. வீரப்பன், பொருளாளர் திரு. ஜெயச்சந்திரன் உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்க தலைவர் திரு. கோவிந்தராஜ்,  கக்கன்ஜி லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்க செயலர் திரு. ராஜாங்கம், சென்ட்ரல் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பேராசிரியர் பீம.தனஞ்செயன், GK TV திரு.கந்தன் மற்றும் நமது நண்பர்கள் வேல், அகிலன், சிவா, அருள், ரங்ககுமார், வைத்தி, வீரசேகர், முருகவேல், புதுராஜா, செந்தில், சந்தோஷ்குமார், தனசேகர், அம்ஜத், சீனு, ஸ்ரீதர், விநாயகம், ஆனந்த் உட்பட ஊழலுக்கு எதிரான பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பேரவையினர் இந்த உண்ணாவிரதத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.

இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதை கேள்விப்பட்டு,  சுதந்திரப்போராட்ட தியாகி திரு. நாராயணசாமி அவர்கள் (95 வயது) புதுவையிலிருந்து வந்து கலந்துகொண்டதும், இதே நாளில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் நடைபெற்ற மாற்று திறனாளிகளின் கூட்டத்திற்கு வந்த, இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட திரு. புண்ணியகோடி, மாற்று திறனாளிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் நமது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் நெகிழ்ச்சி அளித்தது.

நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரே ஒரு பெண்ணாக தனியே அமர்ந்து திருமதி. கங்கா வைத்தீஸ்வரன் அவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

நிகழ்ச்சி இறுதியில் பேராசிரியர் திரு. பழமலய், மருத்துவர் திரு. சி.மா.பாலதண்டாயுதம், பொறியாளர் சங்க முன்னாள் செயலர் திரு. மணிவண்ணன் ஆகியோர் பேசினர்.

மாநில நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் திரு. தேவராஜ் அவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

தியாகி திரு. நாராயணசாமி அவர்கள் பழச் சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இயக்க தலைவர் திரு. ரா.சுப்பிரமணியன் நன்றி உரை ஆற்றினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக முதல் நாளிலிருந்தே சாப்பிடாமல்  ஆர்வமாக உழைத்த மனவளக்கலை இணை செயலர் திரு. துரை.கருணாநிதி அவர்களுக்கும், தனது எல்லா வேலைகளையும் விட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற எல்லா வழிகளிலும் ஒத்துழைப்பு தந்து உடனிருந்து பணியாற்றிய JK Printers திரு. ஜெயவசந்தன் அவர்களுக்கும் விடியல் தனது நன்றியை தெரிவித்து கொள்கிறது. இவர்கள் இருவரின் ஒத்துழைப்பு இல்லாமல் நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பாக நடந்திருக்காது.

அக்குபங்க்சர் மருத்துவர் Care & Cure திரு.ரா.சிவக்குமார் அவர்கள் நிகழ்ச்சிக்கான விதையிட்டதிலிருந்து, நிகழ்ச்சி முடியும் வரை உடனிருந்து உதவினார் அவருக்கும், நேரம் நள்ளிரவை நெருங்கினாலும் அயராமல் நிகழ்ச்சிக்காக உழைத்த திரு. வேலு, திரு. மணி ஆகியோருக்கும் விடியல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.


புகைப் படங்களுக்கு இணைப்பை சொடுக்கவும்:

Monday, August 15, 2011

இந்திய சுதந்திர தின விழா

15.08.2011 இன்று அகரம் சித்தாமூர் அரசு நடுநிலைப் பள்ளியில்  இந்திய சுதந்திர தினம் மற்றும் வேதாத்திரி மகரிஷியின் பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மரம் நடு விழா சிறப்பாக நடைபெற்றது. 



விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் திரு.M.எட்டியான் தலைமை வகித்தார்.
விழுப்புரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் திரு.G.M.செல்வராஜ் முன்னிலை வகித்து உரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் திரு.V.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார்.

ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு.சி.மா.பாலகணேசன், விழுப்புரம் மாவட்ட மூலிகை மரம் வளர்ப்போர் சங்க தலைவர் C.கோவிந்தராசு, மன வளக்கலை மன்ற அன்பர்கள் ஆசிரியர் சண்முகம், அர்பன் பேங்க் ரவி, சிவ.கோவிந்தராசன், நல்லாபாளையம் கிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு தென்னை மற்றும் பழ மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினர். 

ஆசிரியர் திரு.எட்வின் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 


விடியல் விழிப்புணர்வு இயக்க அன்பர்கள் ரா.சுப்பிரமணியன், சு.விஸ்வநாதன் ஆகியோர் பழ மரக் கன்றுகளை நட்டு உதவினர். 



மன வளக்கலை மன்ற இணைச் செயலர் திரு.துரை.கருணாநிதி நன்றி கூறினார்.

விழா நிறைவில் தேசிய கீதம் பாடப்பட்டது.