Sunday, November 20, 2011

திரு.ராசு




இரத்த தானம் செய்தவர்: திரு.ராசு அவர்கள்.

இரத்தம் பெற்று கொண்டவர்: திருமதி.              அவர்கள்
(திரு.கிரி - 9626021324 அவர்களின் நண்பர்), நன்னாடு, விழுப்புரம்.

சிகிச்சைக்கான காரணம்: கருப்பை கட்டி அகற்றம்.

மருத்துவமனை: மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மதகடிப்பட்டு, புதுச்சேரி.

திரு.ராசு அவர்களுக்கு விடியல் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது. - SEAOBN

Saturday, November 19, 2011

உலக கழிப்பறை தினம்



உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு முழு சுகாதார இயக்கத்தின் சார்பில் விடியல் அத்தியூர் திருக்கை கிராமத்தில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தில் கழிப்பறையின் அவசியம் குறித்தும், சுகாதாரமாக வாழ்வதின் முக்கியம் குறித்தும் விரிவாக விளக்கப் பட்டது. 

கூட்டத்தில் தலைவர் சுப்பிரமணி, செயலர் விஸ்வநாதன், பிரபு, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினர். கழிப்பறையின் பயன், கழிப்பறை கட்ட அரசின் உதவி, அதற்கு கிடைக்கும் மானியம், மானியம் பெற செய்ய வேண்டியது ஆகியவை குறித்து விரிவாக விளக்கப் பட்டது.

மனவளக்கலை மன்ற செயலர் திரு.துரை.கருணாநிதி அய்யா அவர்களின் உரை மிகவும் சிறப்பாக அமைந்தது.

நிகழ்ச்சியில் சுமார் 150 பெண்கள் கலந்து கொண்டு, ஆர்வமுடன் சந்தேகங்களை கேட்டனர். தங்கள் வீட்டிற்கு கழிப்பறையை கூடிய வரையில் விரைவாக கட்டப் போவதாக அவர்கள் ஆர்வமுடன் தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் திரு.செந்திலதிபன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். அவருக்கு விடியல் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

புகைப் படங்களுக்கு இணைப்பை சொடுக்கவும்:
https://picasaweb.google.com/117917965317801102284/1911201?authkey=Gv1sRgCPuq0aDejdXGfA

Friday, November 04, 2011

மழைக் கால நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்.

இன்று, விழுப்புரம் மாவட்ட சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பு, விழுப்புரம் ரோட்டரி சங்கம், ஸ்ரீ அரவிந்த் பாரா மருத்துவ மையம் இணைந்து நடத்திய மழைக் கால நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் புதிய பேருந்து நிலையத்தில் நடந்தது. விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.ராமமூர்த்தி அவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நமது விடியல் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் செயலர் திரு.விஸ்வநாதன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மழைக்கால நோய்களும் அவற்றை தடுப்பதற்கான வழிகளும் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகிக்கப் பட்டது.


தினகரன்


Wednesday, November 02, 2011

விவேகானந்தா கல்லூரியில் இரத்த தான முகாம்



விடியல் விழிப்புணர்வு இயக்கம்லட்சுமிபுரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் ரோடரக்ட் மற்றும் விழுப்புரம் மாவட்ட தன்னார்வ ரத்ததான இயக்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இரத்த தான முகாமை இன்று நடத்தியது.

முகாமை கல்லூரியின் செயலாளர் திரு.பரந்தாமன் தொடங்கி வைத்தார். விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் நிர்வாகி திரு.ரமேஷ் சிறப்புரை ஆற்றினார். விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர் திரு.தமிழ்மணி இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். கல்லூரியின் ரோடராக்ட் ஒருங்கிணைப்பாளர் திரு.சுரேஷ்ராஜா நன்றி உரையாற்றினார்.

கல்லூரியின் நிர்வாக அலுவலர் திரு.சுப்பிரமணியன், விடியல் விழிப்புணர்வு இயக்க தலைவர் திரு.சுப்பிரமணியன், செயலர் திரு.விஸ்வநாதன், விழுப்புரம் மாவட்ட தன்னார்வ ரத்த தான இயக்க செயலர் திரு.கோபிநாத் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

நிகழ்ச்சியில் 41 மாணவர்கள் இரத்த தானம் செய்தனர். விழுப்புரம் அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்கப்பட்டது.

மனவளக்கலை மன்ற இணை செயலாளர் திரு.துரை.கருணாநிதிசமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பின் செயலாளர் திரு.பாபு செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புகைப் படங்களுக்கு இணைப்பை சொடுக்கவும்: