உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு முழு சுகாதார இயக்கத்தின் சார்பில் விடியல் அத்தியூர் திருக்கை கிராமத்தில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தில் கழிப்பறையின் அவசியம் குறித்தும், சுகாதாரமாக வாழ்வதின் முக்கியம் குறித்தும் விரிவாக விளக்கப் பட்டது.
கூட்டத்தில் தலைவர் சுப்பிரமணி, செயலர் விஸ்வநாதன், பிரபு, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினர். கழிப்பறையின் பயன், கழிப்பறை கட்ட அரசின் உதவி, அதற்கு கிடைக்கும் மானியம், மானியம் பெற செய்ய வேண்டியது ஆகியவை குறித்து விரிவாக விளக்கப் பட்டது.
மனவளக்கலை மன்ற செயலர் திரு.துரை.கருணாநிதி அய்யா அவர்களின் உரை மிகவும் சிறப்பாக அமைந்தது.
நிகழ்ச்சியில் சுமார் 150 பெண்கள் கலந்து கொண்டு, ஆர்வமுடன் சந்தேகங்களை கேட்டனர். தங்கள் வீட்டிற்கு கழிப்பறையை கூடிய வரையில் விரைவாக கட்டப் போவதாக அவர்கள் ஆர்வமுடன் தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் திரு.செந்திலதிபன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். அவருக்கு விடியல் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
புகைப் படங்களுக்கு இணைப்பை சொடுக்கவும்:
https://picasaweb.google.com/117917965317801102284/1911201?authkey=Gv1sRgCPuq0aDejdXGfA
புகைப் படங்களுக்கு இணைப்பை சொடுக்கவும்:
https://picasaweb.google.com/117917965317801102284/1911201?authkey=Gv1sRgCPuq0aDejdXGfA
No comments:
Post a Comment