விடியல் விழிப்புணர்வு இயக்கம், லட்சுமிபுரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் ரோடரக்ட் மற்றும் விழுப்புரம் மாவட்ட தன்னார்வ ரத்ததான இயக்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இரத்த தான முகாமை இன்று நடத்தியது.
முகாமை கல்லூரியின் செயலாளர் திரு.பரந்தாமன் தொடங்கி வைத்தார். விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் நிர்வாகி திரு.ரமேஷ் சிறப்புரை ஆற்றினார். விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர் திரு.தமிழ்மணி இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். கல்லூரியின் ரோடராக்ட் ஒருங்கிணைப்பாளர் திரு.சுரேஷ்ராஜா நன்றி உரையாற்றினார்.
கல்லூரியின் நிர்வாக அலுவலர் திரு.சுப்பிரமணியன், விடியல் விழிப்புணர்வு இயக்க தலைவர் திரு.சுப்பிரமணியன், செயலர் திரு.விஸ்வநாதன், விழுப்புரம் மாவட்ட தன்னார்வ ரத்த தான இயக்க செயலர் திரு.கோபிநாத் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
நிகழ்ச்சியில் 41 மாணவர்கள் இரத்த தானம் செய்தனர். விழுப்புரம் அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்கப்பட்டது.
மனவளக்கலை மன்ற இணை செயலாளர் திரு.துரை.கருணாநிதி, சமூக நல அமைப்புகளின் கூட்டமைப்பின் செயலாளர் திரு.பாபு செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புகைப் படங்களுக்கு இணைப்பை சொடுக்கவும்:
No comments:
Post a Comment